IPL 2023: ஹென்ரிச் கிளாசன் காட்டடி சதம்..! RCB-க்கு வாழ்வா சாவா போட்டியில் கடின இலக்கை நிர்ணயித்தது SRH

By karthikeyan V  |  First Published May 18, 2023, 9:34 PM IST

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஹென்ரிச் கிளாசனின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்து 187 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடைசி 2 போட்டிகளிலும் கண்டிப்பாக ஜெயித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது ஆர்சிபி அணி. ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ்  வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Latest Videos

ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்

ஆர்சிபி அணி: 

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், ஷபாஸ் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், கரன் ஷர்மா, முகமது சிராஜ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், கார்த்திக் தியாகி, மயன்க் தாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (11) மற்றும் ராகுல் திரிபாதி (15) ஆகிய இருவருமே பதின்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஐடன் மார்க்ரமும் 20 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். 

IPL 2023: பஞ்சாப்பின் உத்தி சரியானதுதான்.. ஆனால் ரொம்ப லேட்டா பண்ணிட்டாங்க..! சேவாக் அதிரடி

4ம் வரிசையில் இறங்கிய ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக பேட்டிங் ஆடி ஆர்சிபி பவுலிங்கை அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடி சதமடித்த கிளாசன் வெறும் 51 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் 27 ரன்கள் அடித்தார். கிளாசனின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 187 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!