புஷ்ஃபயர் போட்டியில் ஷூவை கழட்டிப்போட்டு கோதாவில் குதித்த ஹைடன்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 10, 2020, 4:06 PM IST
Highlights

புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் ஹைடன் ஷூவை கழட்டிப்போட்டு வெறுங்காலோடு செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக, முன்னாள் ஜாம்பவான்கள் கிரிக்கெட் போட்டியில் ஆடினர். புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் மோதின. 

பாண்டிங் அணி:

மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), லிட்ச்ஃபீல்டு, பிரயன் லாரா, அலெக்ஸ் பிளாக்வெல், பிராட் ஹேடின்(விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், லூக் ஹாட்ஜ், பிரெட் லீ, வாசிம் அக்ரம்.

கில்கிறிஸ்ட் அணி:

ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பிராட் ஹாட்ஜ், யுவராஜ் சிங், எலிஸ் வில்லனி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கேமரூன் ஸ்மித், நிக் ரீவோல்ட், பீட்டர் சிடில், ஃபவாத் அகமது, குர்ட்னி வால்ஷ்.

இதில், பாண்டிங் தலைமையிலான அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான் பயிற்சியாளர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாண்டிங் அணி, பாண்டிங் மற்றும் லாராவின் அதிரடியால் 10 ஓவரில் 104 ரன்களை குவித்தது. 105 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கில்கிறிஸ்ட் அணி 10 ஓவரில் 103 ரன்களை அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. 

Also Read - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

இந்த போட்டியில் பாண்டிங் அணியில் ஆடிய அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், யுவராஜ் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கில்கிறிஸ்ட் அணி பேட்டிங் ஆடும்போது, அந்த அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு ஹைடன் பந்துவீசினார். அப்போது ஷூ, சாக்ஸை எல்லாம் கழட்டிவிட்டு வெறுங்காலோடு பந்து வீசினார். அவர் ஷூவை கழட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஹைடன் வீசிய அந்த ஓவரில் சைமண்ட்ஸ் 2 பவுண்டரிகள் அடித்தார். 

Sometimes barefoot is best 🦶🦶 pic.twitter.com/cQNaaejnMi

— cricket.com.au (@cricketcomau)
click me!