நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Feb 10, 2020, 3:27 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை நடக்கிறது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 348 ரன்கள் என்ற இலக்கை 49வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 274 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணியை அடிக்கவிடாமல் 251 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி வென்றுவிட்டது. 

இந்நிலையில், கடைசி போட்டி நாளை மவுண்ட் மாங்கனியில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியும், இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. 

கடைசி போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஷர்துல் தாகூர் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே முகமது ஷமி மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

ஷர்துல் தாகூர் ஒரு பேட்டிங் ஆப்சனாகவும் இருப்பார் என்பதால்தான் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்துவந்தது. மற்றபடி அவரது பவுலிங் பெரியளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், கடந்த போட்டியில் நவ்தீப் சைனி அபாரமாக பேட்டிங் ஆடி அசத்தினார். எனவே அவர் நன்றாக பேட்டிங் ஆடுவதால், ஷர்துல் தாகூரின் அவசியமில்லாமல் போய்விட்டது. எனவே பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக ஷர்துலை நீக்கிவிட்டு, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ஷமி அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

அதேபோல, டி20 போட்டிகளில் நன்றாக ஆடியும் ஒருநாள் அணியில் வாய்ப்பே தரப்படாத மனீஷ் பாண்டேவிற்கும் இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ஒருநாள் அணியில் எடுத்து பென்ச்சிலேயே உட்கார வைக்கின்றனர். ஆடும் லெவனில் மனீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும். வாய்ப்பே கொடுக்காமல் சும்மாவே பென்ச்சில் உட்கார வைப்பது சரியாக இருக்காது. கடந்த போட்டியிலேயே மனீஷ் பாண்டே எடுக்கப்படாதது குறித்து சர்ச்சை எழுந்தது. எனவே நாளைய போட்டியில் கண்டிப்பாக மனீஷ் ஆட வாய்ப்புள்ளது. 

கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜடேஜா, நவ்தீப் சைனி, சாஹல், முகமது ஷமி, பும்ரா. 
 

click me!