2 முறை வாய்ப்பை நழுவவிட்ட தமிழக வீரருக்கு இந்திய அணியில் இடம்..! இந்திய டி20 அணி.. ஹர்ஷா போக்ளேவின் தேர்வு

By karthikeyan VFirst Published May 26, 2021, 4:16 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ள டி20 இந்திய அணியை பார்ப்போம்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

கோலி, ரோஹித் என அணியின் சீனியர் நட்சத்திர வீரர்கள் ஆடாத இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியை சீனியர் வர்ணனையாளரும் கிரிக்கெட் பத்திரிகையாளருமான ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான தொடக்க வீரர்களாக அனுபவ தவான், இளம் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசை வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளார். இதே வீரர்களைத்தான் ஒருநாள் அணிக்கும் தேர்வு செய்திருந்தார்.

5ம் வரிசையிலிருந்தே ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துவிட்டார். 5 மற்றும் 6ம் வரிசைகளில் பாண்டியா பிரதர்ஸையும், ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியாவையும் டி20 அணியில் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, ஏற்கனவே 2 முறை இந்திய டி20 அணியில் இடம்பிடித்தும் ஆடமுடியாமல் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்துள்ளார். மற்றொரு ஸ்பின்னராக ராகுல் சாஹர் - யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்துள்ளார்.

ஆஸி., சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி, காயம் காரணமாக அந்த தொடரில் ஆடவில்லை. அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பித்தார் வருண் சக்கரவர்த்தி. ஆனால் யோ யோ டெஸ்ட்டில் தேறாததால், அந்த தொடரிலும் ஆடவில்லை. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அவரை இலங்கைக்கு எதிரான தனது அணியில் எடுத்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர்/யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!