ஐபிஎல் 2020: கேகேஆர் அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர்

By karthikeyan VFirst Published Feb 18, 2020, 10:50 AM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் கேகேஆர் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவது எந்த வீரர் என்று ஹர்ஷா போக்ளே கணித்துள்ளார். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு அடுத்து கேகேஆர் தான்.

கம்பீரின் தலைமையில் இரண்டு முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள கேகேஆர் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால் கடந்த 2சீசன்களில் தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் அந்த வாய்ப்பு அமையவில்லை. 

இந்நிலையில், வரும் சீசனிலாவது டைட்டிலை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் கேகேஆர் அணி உள்ளது. கேகேஆர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிகப்பட்டிருக்கிறார். இந்த சீசனுக்கான ஏலத்தில் கேகேஆர் அணி, பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், பிரவீன் டாம்பே, சித்தார்த் மணிமாறன் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. 

இவர்களில் பாட் கம்மின்ஸை அதிகமான விலைக்கு எடுத்த கேகேஆர் அணி, இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை ரூ.5.25 கோடிக்கு எடுத்தது. இயன் மோர்கன் தான் இந்த ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதாக தான் கருவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். இயன் மோர்கன் டி20 கிரிக்கெட்டில் டாப் ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் நிலையில், ஹர்ஷா போக்ளே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அண்மையில் நடந்த டி20 தொடரை இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. அதுமட்டுமல்லாமல் அந்த தொடரின் கடைசி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற மோர்கன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

ஐபிஎல்லில் இதுவரை, ஆர்சிபி, கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் இயன் மோர்கன் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அவர் ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலும் அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்கு முதல் முறையாக வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெற்ற இயன் மோர்கனை, இந்த முறை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

Also Read - டுப்ளெசிஸின் திடீர் முடிவு.. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

அவர் அதிரடியான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, கேப்டனும் கூட என்பதால் அவர் பேட்டிங்கில் மட்டுமல்லாது, களத்தில் கேப்டனுக்கும் வீரர்களுக்கும் ஆலோசனைகளையும் வழங்குவார் என்பதால் கண்டிப்பாக ஹர்ஷா போக்ளே சொன்னதுபோல பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. 
 

click me!