தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு..!

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 10:38 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சில பெரிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர். தீபக் சாஹரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டுக்கு அவர் எந்தவிதத்தில் குறைச்சல்? இந்திய அணி தேர்வை கண்டு டுவிட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர்.  முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் ஆகிய நால்வரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.  

டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் ஆடுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி 2 டி20 தொடர்கள் இவைதான். வரும் 20ம் தேதி முதல் 25 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் இந்திய அணி ஆடுகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடிவிட்டு அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு செல்வதால்,  டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவருக்கும் இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையிலும் ஆடிய அவர்கள் இருவரின் ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு டி20 உலக கோப்பைக்கு அவர்கள் ஃப்ரெஷ்ஷாக வருவதை உறுதி செய்யும் வகையில், அவர்கள் இருவருக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான அணியில் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ள ஷமி  மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!