டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 9:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - ENG vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர்.  முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் ஆகிய நால்வரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.  

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆடுவார்கள். 5 வரிசைக்குள் பேட்டிங் ஆடுவதாக இருந்தால் மட்டுமே ரிஷப் பண்ட் சரிப்பட்டுவருவார். 6ம் வரிசை பேட்டிங் ஃபினிஷிங் ரோல். அதற்கு தினேஷ் கார்த்திக் தான் சரியாக வருவார் என்பதால் விக்கெட் கீப்பராக அவர் தான் ஆடுவார்.

ஸ்பின்னர்களாக சாஹலுடன், அஷ்வின் - அக்ஸர் படேல் ஆகிய இருவரில் ஒருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய மூவரும் களமிறங்குவார்கள்.

இதையும் படிங்க - சிஎஸ்கேவின் வெற்றிதான் எங்களுக்கு உத்வேகம் அளித்தது..! ஆசிய கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!