ENG vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

By karthikeyan VFirst Published Sep 12, 2022, 8:46 PM IST
Highlights

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை பார்ப்போம்.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் புள்ளி பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் 75 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்கவைத்த தென்னாப்பிரிக்க அணி, 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் வெற்றி சதவிகிதம் 75லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது.

இதையடுத்து புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின் தங்கியது தென்னாப்பிரிக்க அணி. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டிலும் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 66.67 சதவிகிதத்திலிருந்து 60 ஆக குறைந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணி 2ம் இடத்தில் தான் உள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணி 53.33 சதவிகிதத்துடன் 3ம் இடத்திலும், இந்திய அணி 52.08 சதவிகிதத்துடன் 4ம் இடத்திலும் உள்ள நிலையில், இலங்கை, இந்தியா அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று, தென்னாப்பிரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழக்கும். 

5 முதல் 8ம் இடங்கள் வரை முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன.
 

click me!