கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்படும் குர்ணல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியும், தனது தம்பியும், குஜராத் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவின் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகளில் தங்களது அணியும் இடம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. அந்த வகையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 3ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கோலியின் ஆக்ரோஷத்தை அடக்கிய டெல்லி: ஒரு வழியா கை கொடுத்து சமாதானமான விராட் கோலி - கங்குலி!
இதில் வேடிக்கை என்னவென்றால், கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக லக்னோ அணிக்கு கேப்டனாக இருக்கும் குர்ணல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியும், தனது இளைய சகோதரனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் தான் இன்றைய முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டினா சண்டை; அப்புறம் சமாதானம்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் - சால்ட்; நல்ல வேல ஃபைன் இல்ல!
இதில், அண்ணனா? தம்பியா? விட்டுக் கொடுக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதுவரையில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் ஒரு முறை கூட லக்னோ அணி வெற்றி பெற்றதில்லை. கடந்த சீசனில் 2 முறையும், இந்த சீசனில் ஒரு முறையும் மோதியுள்ளன. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த 30ஆவது போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுவரையில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த 5 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் எதிரணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக குஜராத் அணி 207 ரன்கள் குவித்துள்ளது.
தோனிக்காகவே பிஸியான ஷெடியூலிலும் சென்னை போட்டியை பார்க்க வந்த நயன்தாரா!
இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கு 91 சதவிகித வாய்ப்பிருக்கிறது. இதே போன்று 10ல் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கு 58 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டியில் லக்னோ ஜெயித்தால் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது. அதே போன்று குஜராத் அணி ஜெயித்தாலும் எந்த மாற்றமும் இருக்காது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச 11:
விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உத்தேச 11:
குயிண்டன் டி காக்/மனன் வோஹ்ரா, கைல் மேயர்ஸ், தீபக் கூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), குர்ணல் பாண்டியா (கேப்டன்), கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், மோசின் கான்.