நீ உண்மையாவே மிகப்பெரிய “லெஜண்ட்”ப்பா..! சீனியர் வீரருக்கு ஹர்பஜன் சிங் புகழாரம்

By karthikeyan VFirst Published Feb 27, 2021, 9:14 PM IST
Highlights

அஷ்வினை மிகப்பெரிய லெஜண்ட் என்று மற்றொரு லெஜண்ட் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த அந்த போட்டியில், ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், ஸ்பின்னர்களே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தினர். அக்ஸர் படேல் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அஷ்வின் இந்த டெஸ்ட்டில், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். கபில் தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகிய மூவருக்கு அடுத்தபடியாக 400 டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல்லை எட்டும் 4வது இந்திய பவுலர் அஷ்வின் ஆவார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய 2வது வீரர் அஷ்வின் ஆவார். அஷ்வினுக்கு மேல், முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் முரளிதரன் மட்டுமே உள்ளார். அஷ்வின் 77 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில், அஷ்வினுக்கு முந்தைய இந்திய அணியின் லெஜண்ட் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங், அஷ்வினை லெஜண்ட் என புகழ்ந்துள்ளார்.

 அஷ்வின் குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலுவாக இருந்தால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டமுடியும். 400 பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, இந்திய அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அஷ்வின் மிகப்பெரிய லெஜண்ட் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
 

click me!