#ICCWTC ஃபைனல்: இப்ப இருக்குற ஃபார்மை பாருங்க..! அனுபவ வீரரை ஒதுக்கிட்டு இளம் வீரரை பரிந்துரைக்கும் ஹர்பஜன்

By karthikeyan VFirst Published Jun 11, 2021, 3:19 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்தும், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் மற்றும் பவுலிங் யூனிட் ஆகியவை குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள ஹர்பஜன் சிங், நான் கேப்டனாக இருந்தால் 3 தரமான ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுவேன். பும்ரா, ஷமி ஆகிய இருவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். 3வது ஃபாஸ்ட் பவுலராக இஷாந்த் சர்மாவை எடுக்காமல் முகமது சிராஜைத்தான் எடுப்பேன்.

இப்போதைக்கு யார் சிறப்பாக வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்தவகையில், சிராஜின் தற்போதைய ஃபார்ம், அவரது வேகம், தன்னம்பிக்கை ஆகிய அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் ஆட அவரை தகுதியாக்குகிறது. கடந்த 6 மாதங்களாக அவர் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். அணியில் அவரது வாய்ப்புக்காக காத்திருக்கும் பெரும் வேட்கை கொண்ட பவுலராக உள்ளார் சிராஜ். இஷாந்த் சர்மா இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்காற்றியிருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் சிராஜ் தான் சரியான தேர்வாக இருப்பார். நியூசிலாந்து வீரர்கள், சிராஜின் பவுலிங்கை எதிர்கொள்வது கடினம் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!