#SLvsIND இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு.! ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு; தவான் கேப்டன்

Published : Jun 11, 2021, 10:46 AM IST
#SLvsIND இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு.! ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு; தவான் கேப்டன்

சுருக்கம்

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இளம் வீரர்களுக்கு இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷிகர் தவான் தலைமையிலான அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், சாஹல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடிய இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சக்காரியாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

வருண் சக்கரவர்த்தி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய ஸ்பின்னர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் நெட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

நெட் பவுலர்கள் - இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் 
 

PREV
click me!

Recommended Stories

ஒரே போட்டியில் 5 சாதனைகள்! யுவராஜ், ரோஹித்தை ஓரங்கட்டிய அபிஷேக் சர்மா
IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!