#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடணும்..! பாக்., முன்னாள் வீரர் கருத்து

Published : Jun 10, 2021, 09:53 PM IST
#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடணும்..! பாக்., முன்னாள் வீரர் கருத்து

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுமே ஆட வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ள நிலையில், அதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் குறித்து பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இந்திய அணியில் ஆட வேண்டும். எதிரணியான நியூசிலாந்து, ஸ்பின்னை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் ஆசிய அணி அல்ல. எனவே 5 பவுலர்களில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இருக்க வேண்டும்.  இருவருமே இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக வீசுவார்கள். 

இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்காது என்று கூறலாம். ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கை மட்டும் வைத்து அட்டாக் செய்தால், பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவருடனும் இந்திய அணி ஆட வேண்டும் என்று கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலகளாவிய அங்கீகாரம்.. 'TIME 100 Next' பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி.. மெகா சாதனை!
Asian Games 2026: இஷான் கிஷான் சரவெடி.. இலங்கையை துவம்சம் செய்த இந்தியா.. பைனலில் பாகிஸ்தானுடன் மோதல்!