
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் சிப்ளி 35 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜாக் க்ராவ்லி(0), ஜோ ரூட்(4), ஆலி போப்(19) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 127 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்ற தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ், 81 ரன்னில் டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஜேம்ஸ் பிரேஸியையும் வீழ்த்தினார் போல்ட்.
175 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. லாரன்ஸும் ஆலி ஸ்டோனும் இணைந்து ஆடிவருகின்றனர்.