என்னை ஒதுக்கிட்டு தோனியை கேப்டனாக நியமித்தது ஏமாற்றம் தான்..! பல வருட மனக்குமுறலை கொட்டிய யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published Jun 10, 2021, 8:18 PM IST
Highlights

2007 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக தன்னைத்தான் நியமிப்பார்கள் என எதிர்பார்த்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 

2007 ஒருநாள் உலக கோப்பையில் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியதையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் ராகுல் டிராவிட். இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

அந்த காலக்கட்டத்தில், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தனது அபாரமான பேட்டிங்கால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். ஆனாலும், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

தோனியின் கேப்டன்சியில் 2007ல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடர்கள் அனைத்தையும் வென்றதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

யுவராஜ் சிங்கை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காமல், தோனியை கேப்டனாக்கியது குறித்த அதிருப்தியை யுவராஜ் சிங்கின் தந்தை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் யுவராஜ் சிங் இதுகுறித்து பேசியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் முதல் முறையாக கேப்டன் பொறுப்பு கிடைக்காத ஏமாற்றத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கவுரவ் கபூரின் 22 யார்ன்ஸ் பாட்கேஸ்ட்டில் பேசிய யுவராஜ் சிங், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் தோற்ற பின்னர், இந்திய அணியில் குழப்பம் நிலவியது. அதன்பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம், டி20 உலக கோப்பை என மொத்தம் 4 மாதம் நீண்ட சுற்றுப்பயணமாக இருந்தது. எனவே சீனியர் வீரர்கள் பிரேக் எடுத்துக்கொண்டனர். உண்மையாகவே சீனியர் வீரர்கள் யாரும் டி20 உலக கோப்பையை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவே டி20 உலக கோப்பைக்கு நான் தான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.
 

click me!