#WIvsSA வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் நோர்க்யா..! மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்

Published : Jun 10, 2021, 09:41 PM IST
#WIvsSA வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் நோர்க்யா..! மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர்.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்துவருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் க்ரைக் பிராத்வெயிட் ஆகிய இருவரையும் தலா 15 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் அன்ரிக் நோர்க்யா. பானரை 10 ரன்னில் ரபாடா வீழ்த்தினார். கைல் மேயர்ஸை ஒரு ரன்னில் நோர்க்யா வீழ்த்த, நோர்க்யாவிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 
PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!