இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 3:46 PM IST
Highlights

ஹர்பஜன் சிங் தனது ஆல்டைம் டி20 சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த வேளையில், ஹர்பஜன் சிங், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் லூயிஸ். கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடி 1000 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியுள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் ஆடி 2864 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 138 சிக்ஸர்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர்.

இதையும் படிங்க - எதுக்கும் பிரயோஜனமில்லாத அவரை நீக்கிவிட்டு இவரை ஆடவைப்பது இந்திய அணிக்கு நல்லது - டேனிஷ் கனேரியா

3ம் வரிசையில் பெரும்பாலானோர் விராட் கோலியைத்தான் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்வார்கள். ஆனால் ஹர்பஜன் சிங் கோலியை தேர்வு செய்யவில்லை. இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரும், இந்த டி20 உலக கோப்பையில் சதமடித்த ஒரே வீரருமான ஜோஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார்.

4ம் வரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் டிவில்லியர்ஸையும், அதன்பின்னர் ஆல்ரவுண்டர்களாக 3 வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்களான பிராவோ, பொல்லார்டு மற்றும் சுனில் நரைன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். கைரன் பொல்லார்டு, பிராவோ, சுனில் நரைன் ஆகிய மூவருமே ஐபிஎல் உட்பட உலகின் முன்னணி டி20 லீக் தொடர்கள் அனைத்திலும் ஆடி டி20 கிரிக்கெட்டில் அபரிமிதமான அனுபவத்தை கொண்டவர்கள்.

இதையும் படிங்க - உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், அவரைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட 2007ல் முதல் டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனி தான். களவியூகங்கள், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்தல் ஆகிய கேப்டன்சி விஷயங்களில் தோனிக்கு நிகர் தோனியே என்ற வகையில், தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஃபாஸ்ட் பவுலர்களாக டி20 ஜாம்பவான்களான லசித் மலிங்கா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இதையும் படிங்க - IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்:

ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஜோஸ் பட்லர், ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ், எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கைரன் பொல்லார்டு, சுனில் நரைன், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!