New Zealand vs Afghanistan இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி! ஆஃப்கானுக்கு சாதகமான டாஸ்

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 3:31 PM IST
Highlights

இந்தியாவின் பார்வையில் மிக முக்கியமான போட்டியான, நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.  இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளையும் விட இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 3 அணிகளுக்குமே ஒரேயொரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் 2 அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதையும் படிங்க - எதுக்கும் பிரயோஜனமில்லாத அவரை நீக்கிவிட்டு இவரை ஆடவைப்பது இந்திய அணிக்கு நல்லது - டேனிஷ் கனேரியா

நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அபுதாபியில் நடக்கிறது. இந்திய அணி நமீபியாவை நாளைய போட்டியில் கண்டிப்பாக வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும் என்பதால், இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தினால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே  இந்தியாவின் பார்வையில் இது மிக முக்கியமான போட்டி.

ஆஃப்கானிஸ்தான் அணியின் பலமே பவுலிங் தான். குறிப்பாக ஸ்பின் பவுலிங். அதனால் இந்த தொடரின் ஆரம்பத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடி, சவாலான இலக்கை எதிரணிகளுக்கு நிர்ணயித்து, ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், நபி ஆகிய ஸ்பின்னர்களை கொண்டு அந்த இலக்கை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்துவதுதான் ஆஃப்கானிஸ்தான் அணியின் திட்டமாக இருந்தது. அதை மாற்றி இந்தியாவிற்கு எதிராக ஃபீல்டிங்கை தேர்வு செய்த ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் ஆடாத ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் இந்த போட்டியில் ஆடுவது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் பலம்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், குல்பாதின் நைப், முகமது நபி (கேப்டன்), கரீம் ஜனத், ரஷீத் கான், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன், முஜிபுர் ரஹ்மான்.

இதையும் படிங்க - உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.
 

click me!