வான்டெர் டசன், மார்க்ரம் செம அதிரடி பேட்டிங்.. இங்கிலாந்துக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Nov 6, 2021, 9:35 PM IST
Highlights

வான்டெர் டசன் மற்றும் மார்க்ரமின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெற பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தை எதிர்த்து ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி ஏற்கனவே 8 புள்ளிகளை பெற்றிருந்தாலும் அந்த அணிக்கும் இது முக்கியமான போட்டியே.

 

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

 

இங்கிலாந்து அணி:

 

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட்.

 

தென்னாப்பிரிக்க அணி:

 

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.

 

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டி காக் 27 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

 

அதன்பின்னர் வான்டெர் டசனும் மார்க்ரமும் இணைந்து சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய டசன் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் மேலும் அதிரடியாக ஆடி சிக்சர்களை விளாசி ரன் வேகத்தை உயர்த்தினார் டசன். மார்க்ரமும் அடித்து ஆட அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது.

 

அதிரடியாக ஆடிய மார்க்ரமும் அரைசதம் அடிக்க, சதத்தை நோக்கி ஆடிய வான்டெர் டசன் 60 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 94 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். மார்கரம் 25 பந்தில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 52 ரன்களை விளாசினா்.

வான்டெர் டசன் மற்றும் மார்க்ரமின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

click me!