எதுக்கும் பிரயோஜனமில்லாத அவரை நீக்கிவிட்டு இவரை ஆடவைப்பது இந்திய அணிக்கு நல்லது - டேனிஷ் கனேரியா

By karthikeyan VFirst Published Nov 6, 2021, 8:24 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் டேனிஷ் கனேரியா.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணிக்கு, முதல் 2 போட்டிகள் விரும்பத்தகாதவையாக அமைந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே இந்திய அணியின் தேர்வு மிகக்கடும் விமர்சனத்துக்குள்ளானது. சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை சேர்க்காதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான படுதோல்விக்கு பின்னரும் அஷ்வினை ஆடவைக்காத இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக தேவையில்லாத வேலையாக பேட்டிங் ஆர்டரை மாற்றி இறக்கி அந்த போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக்கொண்டு ஆடிய இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டு அபார வெற்றியை பெற்றது. அதன்பின்னர் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அபாரமாக ஆடி 86 ரன்கள் என்ற இலக்கை 6.3 ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்று ஆஃப்கானிஸ்தான் ரன்ரேட்டை விட அதிகம் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக பெரிய வெற்றி பெற்றுவிடும். எனவே ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தும்பட்சத்தில், இந்திய அணி நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இந்திய அணிக்கு இன்னும் இந்த உலக கோப்பையில் மறைமுக வாய்ப்பு இருக்கும் நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் டேனிஷ் கனேரியா.

இதையும் படிங்க - உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!

மாயாஜால ஸ்பின்னர் என்று இந்திய அணியில் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, இந்த உலக கோப்பையில் 3 போட்டிகளில் ஆடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 3 அணிகளுக்கு எதிராக ஆடிய வருண் சக்கரவர்த்தி கிட்டத்தட்ட அவரது முழு பவுலிங் கோட்டாவையும் வீசிய நிலையில், ஒரு விக்கெட்டை கூட அவரால் வீழ்த்த முடியவில்லை.

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் ஃபைனலில் மோதணும்.. அப்பதானே மறுபடியும் இந்தியாவை தோற்கடிக்கலாம்..! அக்தர் ஆணவ பேச்சு

இந்நிலையில் அவருக்கு பதிலாக பென்ச்சில் இருக்கும் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரை அணியில் எடுத்தால், அவர் கண்டிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுப்பார். ராகுல் சாஹரிடம் நல்ல வேரியேஷன் இருப்பதால், அவர் கண்டிப்பாக இந்திய அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுப்பார். வருண் பவுலிங்கில் வேரியேஷன் இல்லாததால், அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. எனவே வருணை நீக்கிவிட்டு வருணுக்கு பதிலாக ராகுல் சாஹரை ஆடவைக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா அபார சாதனை..!

click me!