ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்.. வெறும் 3 இந்திய வீரர்கள்.. ஆஸ்திரேலியர்கள் ஆதிக்கம்! முன்னாள் இந்திய வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published Jun 6, 2020, 10:26 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவனை பார்ப்போம். 
 

முன்னாள் வீரர்கள் பலரும் ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்வது வழக்கம். அதிலும் கொரோனா ஊரடங்கில் வீடுகளில் முடங்கியிருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஏற்கனவே தேர்வு செய்திருக்கும் அவரது உலக டெஸ்ட் லெவனை பார்ப்போம்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக 2 முச்சதங்களை விளாசியுள்ள மற்றும் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ள சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவருமான ராகுல் டிராவிட்டையும், நான்காம் வரிசை வீரராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணியை அசைக்கமுடியாத சக்தியாக வைத்திருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாகவும் விக்கெட் கீப்பராக சங்கக்கராவையும் தேர்வு செய்துள்ளார். 

ஆல்ரவுண்டர்களாக ஜாக் காலிஸ் மற்றும் ஷான் போலாக்கையும் ஸ்பின்னராக வார்னேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் க்ளென் மெக்ராத்தையும் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். 

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் பெஸ்ட் டெஸ்ட் லெவன்:

வீரேந்திர சேவாக், மேத்யூ ஹைடன், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), ஷான் போலாக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத். 

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த அணியில் சேவாக், சச்சின், டிராவிட் ஆகிய மூவர் மட்டுமே இந்திய வீரர்கள். ஹர்பஜனின் ஆல்டைம் டெஸ்ட் லெவனில் ஆஸ்திரேலிய வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஹைடன், பாண்டிங், வார்ன், மெக்ராத் என அதிகபட்சமாக 4 ஆஸ்திரேலிய வீரர்களை ஹர்பஜன் தேர்வு செய்துள்ளார். அவர்கள் நால்வருமே, ஹர்பஜன் ஆடிய அதே காலக்கட்டத்தில் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!