ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் இவங்கதான்..! ஹர்பஜன் சிங்கின் தேர்வு..கேப்டன் யார் தெரியுமா..?

Published : Apr 26, 2022, 03:55 PM IST
ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் இவங்கதான்..! ஹர்பஜன் சிங்கின் தேர்வு..கேப்டன் யார் தெரியுமா..?

சுருக்கம்

ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முன்னாள் சுழல் ஜாம்பவானும், ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன் சிங், ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். இவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு இருவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதேபோலத்தான் 3ம் வரிசை வீரரும்.. 3ம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். 

4ம் வரிசை வீரராக, எந்த வரிசையிலும் இறங்கி பேட்டிங் ஆடவல்ல ஷேன் வாட்சனையும், 5ம் வரிசையில் டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியை தேர்வு செய்து, அவரையே ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். தோனி சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்தவர். ரோஹித்தும் மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தான் என்றாலும், தோனி கேப்டன்சியில் அவருக்கும் சீனியர் என்ற முறையிலும் சிறந்தவர் என்ற முறையிலும் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங், ரோஹித் கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது, தோனி தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்றபோதும் அந்த அணிகளில் அங்கம் வகித்திருக்கிறார்.

ஆல்ரவுண்டர்களாக பொல்லார்டு, ஜடேஜா, சுனில் நரைன் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்கின் ஆல்டைம் சிறந்த ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷேன் வாட்சன், டிவில்லியர்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, கைரன் பொல்லார்டு, சுனில் நரைன், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!