RCB vs RR: ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம்.. அதிரடி வீரருக்கு வாய்ப்பு..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 26, 2022, 02:48 PM IST
RCB vs RR: ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம்.. அதிரடி வீரருக்கு வாய்ப்பு..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனே எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த சீசனில் சிறப்பாக ஆடிவரும் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபி அணி ஆடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. 

2 அணிகளுமே சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. சன்ரைசர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் வெறும் 68 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வி அடைந்த ஆர்சிபி அணி, அந்த படுதோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

ஆர்சிபி அணியின் காம்பினேஷனில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். தொடர்ச்சியாக சொதப்பிவரும் தொடக்க வீரர் அனுஜ் ராவத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி வீரர் மஹிபால் லோம்ரார் சேர்க்கப்படலாம்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத்/மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய்,  ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!