பாவம் ஜடேஜா கேப்டன்சி பண்ற லெட்சணத்துல இது வேறயா..! நீங்க ஏன் ராயுடு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க

By karthikeyan VFirst Published Apr 25, 2022, 8:50 PM IST
Highlights

ஜடேஜா சிஎஸ்கேவை மட்டுமல்ல; இந்திய அணியையே ஒரு நாள் வழிநடத்துவார் என்று அம்பாதி ராயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் களம் கண்டுவரும் சிஎஸ்கே அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி, அதன்பின்னர் 2 வெற்றிகளை பெற்றது. 7 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற சிஎஸ்கே அணி, 8வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுடன் ஆடிவருகிறது.

ரவீந்திர ஜடேஜா கேப்டன்சி பொறுப்பை ஏற்றபின்னர், அவரது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துமே பாதிக்கப்பட்டிருக்கிறது.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக பெயரளவில் ஜடேஜா இருந்தாலும், களத்தில் பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப் என செயலளவில் கேப்டன்சியை ஏற்று செயல்படுவது தோனி தான். தோனி கேப்டன்சி செய்வதால்தான் ஜடேஜாவின் தன்னம்பிக்கை குறைகிறது.

ஜடேஜா கேப்டன்சியில் பெரிதாக சோபிக்காத நிலையில், அவர் ஒரு நாள் இந்திய அணிக்கே கேப்டன்சி செய்வார் என்று அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அம்பாதி ராயுடு, கேப்டன்சியில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது மிகக்கடினம். தோனியின் வழிகாட்டுதலில் ஜடேஜா சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார். ஜடேஜா கேப்டன்சியில் இன்னும் மேம்படுவார். சிஎஸ்கேவை மட்டுமல்ல; இந்திய அணியின் கேப்டனாக இருந்து இந்திய அணியையே ஒரு நாள் வழிநடத்துவார் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

ஜடேஜா கேப்டன்சி ஒருபுறமிருக்க, ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன்சியை ஏற்க கேஎல் ராகுல் - ரிஷப் பண்ட் - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், அந்த வாய்ப்பு ஜடேஜாவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
 

click me!