ஐபிஎல்லில் அபார சாதனை.. ரோஹித், வார்னரை எல்லாம் சைலண்ட்டா தூக்கி அடித்த தவான்.! நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை

Published : Apr 26, 2022, 03:20 PM IST
ஐபிஎல்லில் அபார சாதனை.. ரோஹித், வார்னரை எல்லாம் சைலண்ட்டா தூக்கி அடித்த தவான்.! நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை

சுருக்கம்

ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு எதிராக 1000 ரன்களுக்கும் அதிகமான ரன்களை குவித்து ஷிகர் தவான் அபார சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்கு எதிராக 1000 ரன்களுக்கும் அதிகமான ரன்களை குவித்து ஷிகர் தவான் அபார சாதனை படைத்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். 

ஐபிஎல்லில் கோலி, ரெய்னா, ரோஹித்,  வார்னர், கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் பெரிய பேட்ஸ்மேன்களாகவும், வெற்றிகரமான வீரர்களாகவும் பார்க்கப்படும்/புகழப்படும் நிலையில், 6086 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த 2வது வீரரான தவான் பெரியளவில் பேசப்படுவதில்லை.

தவான் ஐபிஎல்லில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர் ஆவார். ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்ததில் கோலிக்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ள தவான், சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் 88 ரன்களை குவித்ததன்மூலம், சிஎஸ்கேவிற்கு எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற சாதனையை தவான் படைத்தார். இதற்கு முன், ரோஹித் சர்மா (கேகேஆருக்கு எதிராக) மற்றும் வார்னர் (பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக) ஆகிய இருவரும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர். அவர்களுக்கு அடுத்த 3வது வீரர் தவான் ஆவார்.

ஆனால் அவர்கள் இருவரைவிடவும் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை தவான் தான் குவித்துள்ளார். ரோஹித் சர்மா கேகேஆருக்கு எதிராக 1018 ரன்களையும், வார்னர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 1005 ரன்களையும் அடித்துள்ள நிலையில், தவான் சிஎஸ்கேவிற்கு எதிராக 1029 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!