IPL 2023: கேகேஆர் - குஜராத் டைட்டன்ஸ் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! கேகேஆர் அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan V  |  First Published Apr 29, 2023, 3:23 PM IST

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 


ஐபிஎல் 16வது சீசனில் சனிக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா  ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா டாஸ் ஜெயித்திருந்தால் முதலில் பேட்டிங் தான் ஆடியிருப்போம் என்றார். எனவே இரு அணிகளுக்கும் அவர்கள் விரும்பியது கிடைத்திருக்கிறது.

Latest Videos

இந்த போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்குகிறது. 

IPL 2023: 3வது வெற்றி யாருக்கு..? DC vs SRH பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆனால் கேகேஆர் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜேசன் ராய் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாததால் அவருக்கு பதிலாக ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க வீரராக ஆடுகிறார். உமேஷ் யாதவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா என்ற வீரர் ஆடுகிறார்.

கேகேஆர் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வீஸ், ஷர்துல் தாகூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி. 

ICC WTC ஃபைனலில் ராகுல் - கில் இருவரில் யார் ஓபனிங்கில் இறங்கணும்..? காரணத்துடன் கூறும் மைக்கேல் வான்

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.
 

click me!