IPL 2022: ஐபிஎல்லில் இருந்து விலகிய ஜேசன் ராய்! மாற்று வீரரே இல்லாமல் விழி பிதுங்கி நிற்கும் குஜராத் டைட்டன்ஸ்

Published : Mar 01, 2022, 02:43 PM IST
IPL 2022: ஐபிஎல்லில் இருந்து விலகிய ஜேசன் ராய்! மாற்று வீரரே இல்லாமல் விழி பிதுங்கி நிற்கும் குஜராத் டைட்டன்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.   

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்கி, பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் ஆடவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவந்த பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஸ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் ஆகியோர் உள்ளனர். ஏலத்தில் ஜேசன் ராய், மேத்யூ வேட், டேவிட் மில்லர், லாக்கி ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களையும், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ஜெயந்த் யாதவ், ஆகிய இந்திய ஆல்ரவுண்டர்கள் மற்றும் வருண் ஆரோன், முகமது ஷமி, ரிதிமான் சஹா ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருந்தாலும், டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு மாற்று ஆப்சனே இல்லாத அளவிற்கு வெறும் 2 வீரர்களை மட்டுமே எடுத்து வைத்திருந்த நிலையில், அதில் ஒருவர் விலகியுள்ளார். ஷுப்மன் கில்லை ஏலத்திற்கு முன் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஏலத்தில் இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராயை ரூ.2 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது. 

ஐபிஎல் நடக்கும் 2 மாத காலம் பயோபபுள் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த கெடுபிடிக்குள் இருக்கமுடியாது என்பதால், குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக கூறி ஜேசன் ராய் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல்லில் ஆடுவதாக இருந்தால் பயோ பபுளில் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரிந்துதான் ஏலத்தில் பெயர் கொடுத்தார் ராய். ஆனால் தன்னை நம்பி ஒரு அணி ஏலத்தில் எடுத்தபின்னர் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார் ராய்.

ராய் விலகியதால் குஜராத் டைட்டன்ஸ் அணி மிகப்பெரும் சிக்கலில் உள்ளது. கூடுதல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை அந்த அணி எடுக்காத நிலையில் இப்போது ராயும் விலகியுள்ளார். அண்டர் 19 வீரரான யஷ் துல், மேத்யூ வேட், ரிதிமான் சஹா ஆகிய மூவரும் டாப் ஆர்டர் ஆப்சன்கள் தான். இவர்களில் யஷ் துல் நல்ல வீரராக இருந்தாலும் கூட, அவருக்கு அனுபவம் இல்லை. ரிதிமான் சஹா ஃபார்மில் இல்லை. எனவே மேத்யூ வேட் தான் எஞ்சியிருக்கும் ஆப்சன். அதனால் ஷுப்மன் கில்லுடன் மேத்யூ வேட் தொடக்க வீரராக இறக்கிவிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு, அவரது அணி வீரர்களை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பது பெரும் சவாலாக இருக்கும். பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!