ஷோஃபி எக்லெஸ்டோன் சுழலுக்கு திணறிய குஜராத் – கார்ட்னர், லிட்ச்பீல்டு தாக்குபிடிக்க 142 ரன்கள் எடுத்த ஜிஜி!

Published : Mar 01, 2024, 09:06 PM IST
ஷோஃபி எக்லெஸ்டோன் சுழலுக்கு திணறிய குஜராத் – கார்ட்னர், லிட்ச்பீல்டு தாக்குபிடிக்க 142 ரன்கள் எடுத்த ஜிஜி!

சுருக்கம்

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2 ஆவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் லாரா வோல்வார்ட் 28 ரன்களில் ஆட்டமிழக்க, பெத் மூனி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். போஃபே லிட்ச்பீல்டு 35 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். அஷ்லேக் கார்ட்னர் 30 ரன்களில் வெளியேற கடைசியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பந்து வீச்சு தரப்பில் யுபி வாரியர்ஸ் அணியில் ஷோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ராஜேஸ்வரி ஜெயக்வாட் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

ஹர்லீன் தியோல், பெத் மூனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), லாரா வோல்வார்ட், போஃபே லிட்ச்பீல்டு, ஆஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, கத்ரின் பிரைஸ், சினே ராணா, தனுஜா கன்வர், மன்னட் காஷ்யப், மேக்னா சிங்.

யுபி வாரியர்ஸ்:

அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர், கீப்பர்), கிரன் நவ்கிரே, சமாரி அதபட்டு, கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா, சுவேதா ஷெராவத், பூனம் கேம்னர், சைமா தாகூர், ஷோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
இஸ்டத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் கம்பீர்.. நிலைத்தன்மை இல்லாமல் திணறும் இந்திய அணி..