ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2 ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் கேப்டன் பெத் மூனி 8 ரன்களுக்கு ரேணுகா சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
RCBW vs GGT: எந்த மாற்றமும் இல்லை – முதல் வெற்றி பெறுமா குஜராத்? ஆர்சிபி பவுலிங்!
அடுத்து வந்த போஃபே லிட்ச்ஃபீல்டு 5, வேதா கிருஷ்ணமூர்த்தி 9, ஆஷ்லேக் கார்ட்னர் 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஹர்லீன் தியோல் 22 ரன்கள் எடுக்க, காத்ரின் பிரைஸ் 3 ரன்னிலும், சினே ராணா 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய தயாளன் ஹேமலதா 31 ரன்கள் எடுத்தார்.
ஷமி குணமடைந்து ஆரோக்கியம் பெற வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி – வைரலாகும் பதிவு!
இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷோபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட்டும், ஜார்ஜியா வேர்ஹாம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 108 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி களமிறங்குகிறது.
டி20 போட்டியில் சதம் அடித்து ரோகித் சர்மா சாதனையை முறியடித்த வரலாற்று சாதனை படைத்த நமீபியா வீரர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஷொஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வேர்ஹாம், ஷோஃபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீச், சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாகூர் சிங்
குஜராத் ஜெயிண்ட்ஸ்
பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஃபோப் லிட்ச்பீல்டு, ஹர்லீன் தியோல், அஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, சினே ராணா, தனுஜா கன்வர், கேத்ரின் பிரைஸ், லியா தஹூஹூ, மேக்னா சிங்.