குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான WPL 2024 தொடரின் 2ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தொடங்கப்பட்டு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முதலே சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
இதையடுத்து நடந்த 3ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த 5ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி நடக்கிறது.
இதில், டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஷொஃபி டிவைன், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சப்பினேனி மேகனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வேர்ஹாம், ஷோஃபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், ஆஷா ஷோபனா, ரேணுகா தாகூர் சிங்
குஜராத் ஜெயிண்ட்ஸ்
பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஃபோப் லிட்ச்பீல்டு, ஹர்லீன் தியோல், அஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, சினே ராணா, தனுஜா கன்வர், கேத்ரின் பிரைஸ், லியா தஹூஹூ, மேக்னா சிங்.