காயமடைந்த கேப்டன் பெத் மூனை கை தாங்கலாக தூக்கிச் சென்ற டீம் மெம்பர்ஸ்!

Published : Mar 04, 2023, 11:01 PM IST
காயமடைந்த கேப்டன் பெத் மூனை கை தாங்கலாக தூக்கிச் சென்ற டீம் மெம்பர்ஸ்!

சுருக்கம்

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனுக்கு காயமடைந்த நிலையில், அவரை கை தாங்கலாக சக வீராங்கனைகள் வெளியில் கூட்டிச் சென்றனர்.  

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி யஸ்திகா பாட்டியா மற்றும் ஹைலீ மேத்யூஸ் இருவரும் மும்பை அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:

யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சைகா இஷாக், ஹுமைரா கஷி.

பின்னி பெடலெடுத்த ஹர்மன்ப்ரீத் கௌர், ஹைலீ மேத்யூஸ் - மும்பை இந்தியன்ஸ் அசால்ட்டா 207 ரன்கள் குவிப்பு!

உத்தேச குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், அன்னாபெல் சதர்லேண்ட்,  தயாலன் ஹேமலதா, ஜார்ஜியா வாரேஹம், ஸ்னே ராணா, தனுஜா கன்வர், மோனிகா படேல்,  மான்சி ஜோஷி

இதில், யஸ்திகா பாட்டியா மும்பை இந் தியன்ஸ் அணிக்கான முதல் ரன்னை எடுத்தார். அவர் 8 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனுஜா கன்வர் பந்தில் வரேஹம்மிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஷிவர் பிரண்ட் களமிறங்கினார். அவர் 18 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் முதல் பவுண்டரியும், முதல் சிக்சரும் விளாசிய ஹைலீ மேத்யூஸ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் பவுண்டரி, முதல் சிக்சர், முதல் விக்கெட் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்த வீராங்கனைகள்!

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் களமிறங்கினார். ஹாட்ரிக் பவுண்டரி விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 30 பந்துகளில் 13 பவுண்டரி விளாசி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று அமீலியா கேர் 24 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரி உள்பட 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக பூஜா வஸ்ட்ரேகர் (15), வோங் (6) ஓரளவு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்தது. முதல் சீசனின் முதல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் தொடக்க விழாவின் போது நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்களுக்கு மேல் எடுத்தது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சீசனின் தொடக்க விழாவின் போது 207 ரன்கள் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து 208 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் சபினேனி மேகனா மற்றும் பெத் மூனி இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷிவர் பிரண்ட் வீசினார். அப்போது, மூனி பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ஷிவர் வீசிய 4ஆவது பந்தில் ரன் அடிக்க முயன்றுள்ளார். அப்போது அவரது கணுக்கால் பிரண்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் வந்து பார்க்க, அவரால் நடக்க முடியாத நிலையில், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரை சக வீராங்கனைகள் கை தாங்கலாக தூக்கிச் சென்றனர்.

தற்போது வரையில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் சைகா இஷாக் 3 விக்கெட்டுகளும், பிரண்ட் மற்றும் கெர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி