சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

By karthikeyan VFirst Published Feb 28, 2020, 4:14 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய 2 ஜாம்பவான்களில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கரும் பிரயன் லாராவும். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியதால், அதிகமானன் ரன்கள், அதிக சதங்கள் உள்ளிட்ட பல அபாரமான சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 

பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர் அளவிற்கு நீண்டகாலம் கிரிக்கெட் ஆடவில்லையென்பதால், அவரளவிற்கு ரன்களை குவிக்கவில்லை. ஆனால் திறமையின் அடிப்படையில் இருவருமே தலைசிறந்த வீரர்கள். பிரயன் லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன் நாட் அவுட் என்ற மிகச்சிறந்த சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய இருவருமே, வாசிம் அக்ரம், மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்ன், சாக்லைன் முஷ்டாக், வக்கார் யூனிஸ் ஆகிய, எல்லாக்காலத்திலும் சிறந்த பவுலர்களாக அறியப்படும் பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை குவித்தவர்கள்.

சச்சின் டெண்டுல்கர் - பிரயன் லாரா ஆகிய இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். எனினும் அவர்கள் இருவருக்கும் பந்துவீசி அதிகமுறை அவர்களை வீழ்த்திய பவுலரான மெக்ராத்திடம், இருவரில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கேட்டதற்கு, நெற்றியடியாக பதிலளித்துள்ளார். 

சச்சின் - லாரா ஆகிய இருவரில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்ற கேள்விக்கு பதிலளித்த மெக்ராத், பிரயன் லாராவுக்கு பந்துவீசுவது சச்சினுக்கு வீசுவதை விட சற்று கடினம். லாரா அவரது ஆட்டத்தை மாற்றவே மாட்டார். அவரை சுமார் 15 முறை அவுட்டாக்கியிருக்கிறேன். ஆனால் அவர் எங்களுக்கு எதிராக சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசியிருக்கிறார். அதுவும் நானும் ஷேன் வார்னும் இணைந்து ஆடிய காலங்களிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ்களை ஆடி ரன்களை குவித்திருக்கிறார். 

Also Read - உன்னால, உன் கூட ஆடுறவங்களுக்குத்தான் பிரச்னை.. சீனியர் வீரரை விளாசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

பிரயன் லாராவிற்கு, ஒரு குறிப்பிட்ட நாள் அவருடையதாக அமைந்துவிட்டால், அவரை ஒன்றுமே செய்ய முடியாது. சச்சினும் லாராவுக்கு நிகரான கடினமான பேட்ஸ்மேன் தான். ஆனால் பிரயன் லாரா களத்தில் நிலைத்துவிட்டால், மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடிவிடுவார். ரன்களை குவித்துக்கொண்டேயிருப்பார். பிரயன் லாராவிற்கு பேட்டிங் ஆடும்போது பயமே கிடையாது என்று மெக்ராத் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

click me!