இப்போ இருக்குறதுல இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்கள்.. லெஜண்ட் மெக்ராத் அதிரடி

Published : Feb 28, 2020, 02:46 PM IST
இப்போ இருக்குறதுல இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்கள்.. லெஜண்ட் மெக்ராத் அதிரடி

சுருக்கம்

சமகால கிரிக்கெட்டின் டாப் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என்று முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரான க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.   

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத், ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்பவர். சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா ஃபார்மட்டிலும் சேர்த்து மொத்தமாக 949 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மெக்ராத், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன், ஷேன் வார்ன், கும்ப்ளேவிற்கு அடுத்த நான்காவது இடத்தில் இருக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் மெக்ராத் தான். ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலரான க்ளென் மெக்ராத், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த டாப் 3 பவுலர்கள் யார் என்று கூறியுள்ளார். 

இண்டர்வியூ ஒன்றில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மெக்ராத், மிகச்சிறந்த மூன்று பவுலர்களுமே ஆஸ்திரேலியர்கள் தான். கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.. (சிரித்துக்கொண்டே) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..

உண்மையாக சொல்ல வேண்டுமானால், பாட் கம்மின்ஸ், பும்ரா, ரபாடா ஆகிய மூவரும் சிறந்த பவுலர்கள். நீல் வாக்னர்(நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்)-ஐ எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மெக்ராத் சொன்னார். 

Also Read - உன்னால, உன் கூட ஆடுறவங்களுக்குத்தான் பிரச்னை.. சீனியர் வீரரை விளாசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!