சமகால கிரிக்கெட்டின் 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள், 2 பவுலர்கள் யார்.. மெக்ராத்தின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Jan 29, 2020, 10:44 AM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த 2 பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 பவுலர்கள் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். 
 

கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் க்ளென் மெக்ராத். 1993ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய மெக்ராத், 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 563 விக்கெட்டுகளையும், 250 ஒருநாள் போட்டிகளில் ஆடி 381 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான அவரிடம், சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த 2 பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 பவுலர்கள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

Also Read - 3வது டி20.. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

அதற்கு பதிலளித்த மெக்ராத், பும்ரா மற்றும் ரபாடா ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் என்று தெரிவித்தார். “பும்ரா வித்தியாசமான பவுலர். மற்ற ஃபாஸ்ட் பவுலர்களை போல வெகுதூரத்தில் இருந்து ஓடிவராமல், குறைந்த தூரமே ஓடிவந்து நல்ல வேகத்தை ஜெனரேட் செய்கிறார். அவரது வேகம், அசாத்தியமான கட்டுப்பாடு ஆகியவை அபாரமாக உள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்காவின் ரபாடாவும் மிகச்சிறந்த பவுலர். அவருடைய பெரிய ரசிகன் நான்” என்று மெக்ராத் கூறினார். 

அதேபோல, விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் தலைசிறந்த 2 பேட்ஸ்மேன்கள் என்று தெரிவித்தார். “ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். அவர் மற்றவர்களை போல இயல்பான பேட்டிங் ஸ்டைலை கொண்ட பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் அவரது கை மற்றும் கண்களின் ஒருங்கிணைப்புதான் அவரது பெரிய பலம். டெக்னிக்கலாக அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும், அவர் பேட்டிங் ஆடும் விதம் அபாரமானது. எனவே ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேன். 

மற்றொரு சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. கோலி கிளாஸ் பேட்ஸ்மேன். டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். களத்தில் ஒரு கேப்டனாக மிகுந்த ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர். ஆனால் அவர் மிகச்சிறந்த கிளாஸ் பேட்ஸ்மேன்” என்று மெக்ராத் தெரிவித்துள்ளார். 
 

click me!