நியூசிலாந்தில் எப்படி பந்துவீசணும்..? இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை

By karthikeyan VFirst Published Feb 27, 2020, 11:51 AM IST
Highlights

நியூசிலாந்தில் இந்திய பவுலர்கள் எப்படி பந்துவீச வேண்டுமென, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மெக்ராத் அறிவுரை கூறியுள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்  மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பினர் இந்திய வீரர்கள். பவுலிங்கில் இஷாந்த் சர்மா மட்டும் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களை வீழ்த்துவதற்கான தெளிவான திட்டங்களுடன் களத்திற்கு வந்தது. அந்த திட்டத்தை பவுலர்கள் மிகச்சரியாக செயல்படுத்தி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தனர். ஆனால் இந்திய பவுலர்கள் அதை செய்ய தவறிவிட்டனர். 

காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, பும்ராவின் பவுலிங் பழையபடி மிரட்டலாக இல்லை. எதிரணி பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக அடிக்கின்றனர். அதேபோல ஷமியின் பவுலிங்கும் எடுபடவில்லை. ஆனால் காயத்திலிருந்து மீண்டு உடனடியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடிய இஷாந்த் சர்மா சிறப்பக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி அந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணியின் பவுலிங் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதற்கு முக்கியமான காரணம், டெயிலெண்டர்களை அடிக்கவிட்டதுதான். 225 ரன்களுக்கு நியூசிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட இந்திய அணி, அதன்பின்னர் 123 ரன்களை அடிக்கவிட்டது தான் கொடுமை. ஜேமிசன் 44 ரன்களையும் கடைசி வீரரான டிரெண்ட் போல்ட் 24 பந்தில் 38 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரையும் அடிக்கவிட்டதுதான் இந்திய அணியின் பவுலிங் படுமோசமாக இருந்தது என்ற விமர்சனத்துக்கு காரணம்.

நியூசிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டியில் திறம்பட பந்துவீச முடியாமல் திணறிய இந்திய பவுலர்களுக்கு மெக்ராத் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மெக்ராத், இந்திய பவுலிங் யூனிட்டின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. அவர்கள் உலகத்தரம் வாய்ந்த, மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டுவந்து சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பும்ரா காயத்திலிருந்து மீண்டுவருகிறார். பும்ரா நன்றாக கண்ட்ரோல் செய்து வீசக்கூடியவர் மட்டுமல்லாது, நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். ஷமி, சீமை பயன்படுத்தி நல்ல வேகத்துடன் அருமையாக வீசக்கூடியவர். எனவே இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிகச்சிறந்த யூனிட். 

Also Read - 2 வீரர்கள் சதம்.. வெஸ்ட் இண்டீஸை வெளுத்தெடுத்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை

நியூசிலாந்து ஆடுகளங்களை பொறுத்தமட்டில் பவுலர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சரியான ஏரியாக்களில் மிகத்துல்லியமாக தொடர்ச்சியாக வீச வேண்டும் என்று மெக்ராத் ஆலோசனை கூறியுள்ளார். 
 

click me!