இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. எந்த அணிக்கு ஓவர் நெருக்கடி..? கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 10:48 AM IST
Highlights

இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 
 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். 

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய கவாஸ்கர், அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. அதனால் இந்த போட்டியில் அந்த அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இரு நாடுகளுமே உற்றுநோக்கும். பாகிஸ்தான் அணி அண்மையில் சரியாக ஆடாமல் தடுமாறிவருவதால் அந்த அணிக்குத்தான் நெருக்கடி அதிகம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

click me!