இந்திய அணிக்கு அதுதான் பெரிய மைனஸ்.. அதை மட்டும் டார்கெட் பண்ணீங்கனா அடிச்சுடலாம்.. பாகிஸ்தான் அணிக்கு வாசிம் அக்ரம் அதிரடி ஆலோசனை

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 10:26 AM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 
 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். 

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஆவலாக பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தியுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதேநேரத்தில் முடியாத விஷயமும் அல்ல. 

இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்று பாகிஸ்தான் அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார். இந்த போட்டி குறித்து பேசிய வாசிம் அக்ரம், இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. ரோஹித், விராட் கோலி, தவான் இல்லாவிட்டாலும் கூட அவருக்கு பதிலாக இறங்கும் ராகுல் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள். டாப் ஆர்டர் வலுவாக உள்ள அதேவேளையில், மிடில் ஆர்டரில் வலிமையான பேட்ஸ்மேன்கள் இல்லை என்றே நினைக்கிறேன். எனவே பாகிஸ்தான் அணி இந்திய அணியின் மிடில் ஆர்டரை குறிவைத்து தாக்க வேண்டும். அதனால் அனுபவம் மிக்க முகமது அமீரை தொடக்கத்திலேயே பயன்படுத்தாமல் மிடில் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மிடில் ஓவர்களில் பயன்படுத்த வேண்டும் என வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

click me!