சொந்த மண்ணில் அந்த பையனோட ஆட்டம் வேற லெவல்!! இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Mar 2, 2019, 4:29 PM IST
Highlights

சொந்த மண்ணில் அவரது பேட்டிங் வேற லெவல் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் இளம் வீரர் ஒருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. 

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த ராகுல், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு நாடு திரும்பினார். பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு இந்தியா ஏ அணியில் ஆடிவிட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அபரமாக ஆடினார் ராகுல். முதல் போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ராகுல், இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக ஆடினார். எனினும் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். இரண்டு போட்டிகளிலுமே சிறப்பாக ஆடி மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்து அணியில் தனக்கான இடத்தை பிடித்தார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணியில் ராகுல் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. 

தொடர்ச்சியாக சொதப்பிவந்த ராகுல், ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலம். ராகுல் ஃபார்மில் இல்லாதபோதே கவாஸ்கர், ராகுலின் திறமையை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ராகுல்தான் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ராகுல் சிறப்பாக ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், ராயுடுவுக்கு ராகுல் கடும் போட்டியாக திகழ்வார் என கவாஸ்கர் கருதுகிறார். நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காமிடத்தை ராயுடு பிடித்துள்ளார். ஆனால் ராகுல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கும் நிலையில், ராயுடுவிற்கு ராகுல் போட்டியாக திகழ்வார் என்று கவாஸ்கர் நினைக்கிறார். 

மேலும், வெளிநாடுகளில் எப்படியோ, ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் சொந்த மண்ணில் ராகுலின் ஆட்டம் வேற லெவல். இந்தியாவில் எதிரணி பவுலர்களின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடக்கூடியவர் ராகுல் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!