2வது ஓவரிலேயே டக் அவுட்டான ஆஸ்திரேலிய கேப்டன்!! பவுலிங்கில் மிரட்டும் பும்ரா, ஷமி

By karthikeyan VFirst Published Mar 2, 2019, 2:03 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவும் ஷமியும் இணைந்து அருமையாக பந்து வீசிவருகின்றனர். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவும் ஷமியும் இணைந்து அருமையாக பந்து வீசிவருகின்றனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி சாஹலுக்கு பதிலாக ஜடேஜாவுடன் களமிறங்கியுள்ளது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் களமிறங்கினர்.

முதல் ஓவரை ஷமி வீசினார். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, பேட்டிங் முனையில் நின்று முதல் ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்திலிருந்தே அபாரமாக வீசிய ஷமி, அந்த ஓவரை மெய்டன் செய்தார். ஷமியின் பவுலிங்கை பேட்டில் தொடவே பயந்தார் உஸ்மான். 

முதல் ஓவரையே மெய்டனுடன் ஆரம்பித்துவைத்தார் ஷமி. இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்துவிட்டது. 

இதையடுத்து உஸ்மான் கவாஜாவுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறது. ஸ்டோய்னிஸ் பந்துகளை கடத்தாமல் தைரியமாக இந்திய பவுலிங்கை எதிர்கொண்டு ஆடிவருகிறார். ஆனால் உஸ்மான் கவாஜா மிகவும் நிதானமாக ஆடிவருகிறார். பும்ராவும் ஷமியும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். 7 ஓவருக்கு ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 

click me!