ரோஹித், கோலி, ராகுல் இருந்தாலும் டி20 WC அணியில் அவரை ஆடவைக்கணும்..! இளம் வீரருக்காக வரிந்துகட்டும் கம்பீர்

Published : Jun 13, 2022, 06:12 PM IST
ரோஹித், கோலி, ராகுல் இருந்தாலும் டி20 WC அணியில் அவரை ஆடவைக்கணும்..! இளம் வீரருக்காக வரிந்துகட்டும் கம்பீர்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் இணைந்தபின்னரும் கூட, இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடமளிக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.  

இந்திய அணியின் இளம் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.5 கோடி என்ற பெரும் தொகைக்கு எடுத்தது. ஆனால் இஷான் கிஷன் ஐபிஎல்லில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் 15வது சீசனில் 418 ரன்களை இஷான் கிஷன் அடித்திருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு உதவுமளவிற்கான இன்னிங்ஸ்களை அவர் ஆடவில்லை.

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார் இஷான் கிஷன். ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய 2 சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்த தொடரில் ஆடாததால், இஷான் கிஷனுக்கு இந்திய அணிக்காக ஓபனிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷன் முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். 2வது போட்டியிலும் 21 பந்தில் 34 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.

இஷான் கிஷன் இந்திய அணிக்காக பயமே இல்லாமல் அதிரடியாக ஆடி பவர்ப்ளேயில் நல்ல தொடக்கங்களை அமைத்து கொடுத்துவரும் நிலையில், ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் அணியில் இணைந்தாலும், இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடமளிக்கவேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், இஷான் கிஷன் எக்ஸ்-ஃபேக்டர் பிளேயர். பயமே இல்லாமல் துணிச்சலாக அடித்து ஆடும் வீரர். அவர் ஸ்கோர் செய்தாலும் செய்யாவிட்டாலும், பயமற்ற கிரிக்கெட் ஆடும் அவரது அணுகுமுறை அணிக்குத்தேவை. ரோஹித்துடன் இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். ஆஸ்திரேலிய பவுன்ஸ் ஆடுகங்களில் பேக்ஃபூட்டில் நல்ல புல் ஷாட்டுகளை ஆடும் இஷான் கிஷன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை கண்டிப்பாக எடுப்பார்கள் என நினைப்பதாக கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!