IND vs SA:உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலப்பா! நீயே இப்படி ஆடுனா இந்தியா எப்படி ஜெயிக்கிறது? கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 13, 2022, 4:10 PM IST
Highlights

யுஸ்வேந்திர சாஹல் 40-50 ரன்களை வழங்கி வெறும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் இந்திய அணி எப்படி ஜெயிப்பது என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலுமே இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 211 ரன்கள் அடித்தும், 212 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் 148 ரன்கள் மட்டுமே அடிக்க, அதை எளிதாக அடித்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டது.

இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி தோற்றதற்கு பவுலிங் சரியில்லாததுதான் காரணம். 2வது போட்டியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே அபாரமாக பந்துவீசினார். பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகள் மற்றும் டெத் ஓவரில் ஒரு விக்கெட் என மொத்தம் 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். 

ஆனால் அவருக்கு மற்ற பவுலர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. ஹர்ஷல் படேல் 3 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆவேஷ் கான் கட்டுக்கோப்புடன் பந்துவீசி 3 ஓவரில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும், அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் யாருமே எதிர்பார்த்திராத அளவில் 4 ஓவரில் 49 ரன்களை வாரி வழங்கி, ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் பவுலிங்கில் சாஹலை நம்பித்தான் இந்திய அணி உள்ளது. அப்படியிருக்கையில், மிடில் ஓவர்களில் நட்சத்திர ஸ்பின்னரான சாஹல் சரியாக பந்துவீசவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பாதிப்பாகத்தான் அமையும். அதுதான் 2வது டி20 போட்டியில் நடந்தது.

இந்நிலையில், சாஹல் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், பவுலிங்கில் வேகத்தை மாற்றுவது அவசியம். சாஹல் டைட்டாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. அவர் 4 ஓவரில் 50 ரன்கள் கூட வாரி வழங்கலாம். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 40-50 ரன்கள் வழங்கிவிட்டு வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியதுதான் பிரச்னை. 

சாஹல் மெதுவாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்டுகளுக்கு தூண்ட வேண்டும். பேட்ஸ்மேன்கள் 2-3 சிக்ஸர்கள் அடித்தால் கூட பிரச்னையில்லை. அவர் விக்கெட் வீழ்த்த வேண்டும். ஆனால் சாஹல் வேகமாக வீசிவிட்டார். அக்ஸர் படேல் வேகமாக வீசலாம். சாஹலிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை என்று கம்பீர் கூறினார்.
 

click me!