டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்

By karthikeyan VFirst Published Oct 21, 2022, 7:02 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை எடுக்கக்கூடாது; ரிஷப் பண்ட்டைத்தான் எடுக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று முடிந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 23ம் தேதி மெல்பர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியா இடம்பெற்றுள்ள க்ரூப் 2-ல் இடம்பிடித்துள்ளன.

எனவே இந்திய அணி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் அணிகள் இவைதான்.! முழு போட்டி விவரம்

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியின் ஆடும் லெவன் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யாரை ஆடவைப்பது என்பதில் முன்னாள் வீரர்கள் சிலருக்கு கருத்து முரண் உள்ளது. 

தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக ஆடப்போகிறார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிஷப் பண்ட்டைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று ரெய்னா, கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், என்னுடைய ஆடும் லெவனில் 5ம் வரிசையில் ரிஷப் பண்ட், 6ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் அக்ஸர் படேல். இதுதான் என்னுடைய பேட்டிங் ஆர்டர். ஆனால் பயிற்சி போட்டிகளை பார்க்கையில், தினேஷ் கார்த்திக் தான் ஆடுவார் என்பது தெளிவாக தெரிகிறது. வெறும் 10 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. 5-6 என எந்த பேட்டிங் ஆர்டரிலும் இறங்கும் வீரரைத்தான் எடுக்க வேண்டும். 

இதையும் படிங்க - தனி ஒருவனா டி20 உலக கோப்பையை ஜெயிச்சு கொடுக்கவல்ல மேட்ச் வின்னர்..! இந்திய வீரருக்கு ஷேன் வாட்சன் புகழாரம்

ஆனால் தினேஷ் கார்த்திக்கும் சரி, இந்திய அணி நிர்வாகும் சரி.. அவரை கடைசி 2-3 ஓவர்களில் ஆடவைப்பது மட்டுமே நோக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இப்படி நினைப்பது மிகவும் ஆபத்தானது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் அக்ஸர் படேலைத்தான் மேலே இறக்கிவிட நேரிடும். ஹர்திக் பாண்டியாவை இறக்கமுடியாது. எனவே தான் ரிஷப் பண்ட்டை ஆடும் லெவனில் எடுக்கவேண்டும் என நான் கூறுகிறேன். ஆனால் அது கண்டிப்பாக நடக்காது என்று கம்பீர் கூறியுள்ளார்.
 

click me!