ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் ஓபனிங்கில் இறங்கவேண்டும்..? கௌதம் கம்பீர் அதிரடி

By karthikeyan V  |  First Published Dec 30, 2022, 9:19 PM IST

ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் யார் ஓபனிங்கில் இறங்கவேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். 
 


ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவிய இந்திய அணியின் அடுத்த டார்கெட், ஒருநாள் உலக கோப்பை. அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. எனவே 2011க்கு பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

அதற்காக, அணியில் இருக்கும் இடைவெளிகளை நிரப்பி, வலுவான அணியை கட்டமைத்து ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்து இடங்களும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன.

Tap to resize

Latest Videos

ரஞ்சி டிராபி: எவ்வளவோ போராடியும் முடியல.. தமிழ்நாடு - டெல்லி போட்டி டிரா

மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், பின்வரிசையில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் என பேட்டிங் ஆர்டர் உறுதியாகிவிட்டது. சீனியர் தொடக்க வீரரான ஷிகர் தவான் அண்மைக்காலமாக சொதப்பிவரும் அதேவேளையில், இஷான் கிஷன் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து ஓபனிங் ஸ்லாட்டை உறுதிசெய்துவிட்டார். 

இஷான் கிஷன் தொடக்கம் முதலே அடித்து ஆடக்கூடிய வீரர் என்பதால் அதிரடியான தொடக்கம் இந்திய அணிக்கு கிடைக்கும். எனவே தவானை கடந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்ட இந்திய அணி, இஷான் கிஷன் தான் ஒருநாள் உலக கோப்பைக்கான தொடக்க வீரர் என்பதை பறைசாற்றும் விதமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவானை புறக்கணித்தது.

எனினும், ஷிகர் தவான் - இஷான் கிஷன்  ஆகிய இருவரில் ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர் யார் என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், அதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், கடந்த ஒருநாள் இன்னிங்ஸில் இஷான் கிஷன் இரட்டை சதமடித்த நிலையில், இதுகுறித்து விவாதிப்பதே வியப்புதான். இந்த விவாதமே முடிந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தான். ரோஹித்துடன் அவர் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். வங்கதேச கண்டிஷனில் நல்ல பவுலிங் யூனிட்டிற்கு எதிராக இரட்டை சதமடிக்கும் வீரர், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடவேண்டும். 

வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து..! பாகிஸ்தானுக்கு கைகொடுத்த வெதர்.. முதல் டெஸ்ட் போட்டி டிரா
 

35வது ஓவரில் இரட்டை சதத்தை எட்டினார் இஷான் கிஷன். இதைவிட சீக்கிரம் இரட்டை சதமடித்த வீரர் யாரும் கிடையாது. அவருக்கு தொடர் வாய்ப்புகள் அளித்து ஆடவைக்கவேண்டும். அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்வார். எனவே அணிக்காக 2 வேலைகளை ஒரு வீரரை எடுப்பது குறித்து இரண்டாவது சிந்தனையே கிடையாது. அவர் கண்டிப்பாக ஆடவேண்டும். இதில் விவாதமே கிடையாது என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
 

click me!