IPL 2021 பாண்டிங்கிற்கு அவரு மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு! அடுத்த மேட்ச்சுல அவரு ஆட வாய்ப்பே இல்ல - கம்பீர்

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 7:45 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக அடுத்த போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட வாய்ப்பில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டெல்லி கேபிடள்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லிகேபிடள்ஸும் மோதுகின்றன.

துபாயில் நாளை(அக்டோபர் 10) இந்த போட்டிநடக்கிறது. இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட வாய்ப்பில்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

சீனியர் ஸ்பின்னரான அஷ்வின், இந்த சீசனின் அமீரக பாகத்தில் சரியாக ஆடவில்லை. அவரது பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அக்ஸர் படேல் அருமையாக பந்துவீசிவருகிறார். லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக அஷ்வின் ஒரு ஓவரில் 11 ரன்களை கொடுக்க, அதன்பின்னர் அவருக்கு அடுத்த ஓவர் வழங்கப்படவேயில்லை. ஆல்ரவுண்டர் ரிப்பல் படேலுக்கு 3 ஓவர்களை வழங்கி, அஷ்வின் வீச வேண்டிய கோட்டாவை முடித்தார் கேப்டன் ரிஷப் பண்ட்.

இதையும் படிங்க - உன்னைய ஓபனராகத்தான் டீம்ல எடுத்துருக்கோம்; தயாரா இருடா தம்பி..! இஷான் கிஷனிடம் கோலி சொன்ன மெசேஜ்

அஷ்வின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதையே இது காட்டுகிறது என்று கருத்து தெரிவித்துள்ள கம்பீர், அடுத்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஃபிட்டாக இருந்தால் அவர் ஆடுவார் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், அஷ்வின் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை. அஷ்வினுக்கு பதிலாக ஒரு வெளிநாட்டு வீரர் சேர்க்கப்படலாம். பவுலிங் ஆல்ரவுண்டராக ரிப்பல் படேல் ஆடுவார். ஸ்டோய்னிஸ் ஆட தயாராக இருந்தால் அவரை ஆடவைப்பார்கள். அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை என்றாலும், அவர் தரமான பவுலரே.

ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அஷ்வின் ஃபார்மின் மீது திருப்தியாக இல்லை. அஷ்வினுக்கு ஒரு ஓவர் கொடுத்ததன் மூலம், அவர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது தெரிகிறது என்றார் கம்பீர்.
 

click me!