உன்னைய ஓபனராகத்தான் டீம்ல எடுத்துருக்கோம்; தயாரா இருடா தம்பி..! இஷான் கிஷனிடம் கோலி சொன்ன மெசேஜ்

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 5:55 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கு இஷான் கிஷனை தொடக்க வீரராகத்தான் எடுத்திருப்பதாக கேப்டன் கோலி அவரிடமே தெரிவித்திருக்கிறார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. நாளை முதல் பிளேஆஃப் போட்டிகள் நடக்கின்றன. ஐபிஎல் முடிந்ததும் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் கவலையாக இருந்த நிலையில், கடைசி 2 போட்டிகளில் இஷான் கிஷனும்  சூர்யகுமார் யாதவும்  அருமையாக ஆடினர். குறிப்பாக இஷான் கிஷன் மிகச்சிறப்பாக ஆடினார்.

ஐபிஎல் 14வது சீசனின் அமீரக பாகத்தில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் சரியாக ஆடாததையடுத்து, இடையில் சில போட்டிகளில் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். தொடக்க வீரராக இறங்கியதும், அடி வெளுத்துவாங்கினார். தொடக்க வீரராக ஆடிய 2 போட்டிகளிலுமே அரைசதம் அடித்தார். குறிப்பாக சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் ஆடிய விதம் அபாரமானது. அதிரடியாக ஆடி 16 பந்தில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், 32 பந்தில் 84 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தன்னை தொடக்க வீரராகத்தான் எடுத்ததாக கேப்டன் கோலி கூறியதாக இஷான் கிஷன் கூறியிருக்கிறார்.

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். 3வது தொடக்க வீரருக்கான ஆப்சனாக கோலியே இருக்கிறார். ஆனாலும் இஷான் கிஷனை தொடக்க வீரராகத்தான் அணியில் எடுத்திருப்பதாக அவரிடம் கூறியிருக்கிறார் கோலி.

விராட் கோலியுடனான உரையாடல் குறித்து பேசிய இஷான் கிஷன், எனக்கு ஓபனிங்கில் இறங்கி ஆடத்தான் பிடிக்கும். உன்னை ஓபனராகத்தான் அணியில் எடுத்திருக்கிறோம்; எனவே தயாராக இரு என்று என்னிடம் விராட் பாய் கூறினார். டி20 உலக கோப்பை மாதிரியான பெரிய தொடரில் எந்த சூழலிலும் இறங்கி ஆட தயாராக இருக்க வேண்டும். இதுதான் எனக்கு நானே சொல்லிக்கொள்வது என்றார் இஷான் கிஷன். 
 

click me!