IPL 2021 முதல் தகுதிச்சுற்று போட்டி: டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 6:35 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டெல்லி கேபிடள்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் நாளை துபாயில் நடக்கும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வென்றால் நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறமுடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் ஆடும்.

இந்த சீசனில் அருமையாக ஆடிய தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே, கடைசி 2 லீக் போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. எனவே அதில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, மீண்டும் மிக வலுவாக கம்பேக் கொடுத்து தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும் சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். சிஎஸ்கே அணியில் ஒரு ஆல்ரவுண்டருக்கான இடத்தில் மட்டும்தான் மாற்றம் செய்யப்பட்டுவந்தது. பிராவோ அல்லது சாம் கரன் ஆகிய இருவரில் ஒருவர் அந்த இடத்தில் ஆடிவந்தனர். சாம் கரன் காயத்தால் விலகிவிட்டார். சாம் கரன் இருந்தாலுமே, பிராவோ தான் அந்த ஆல்ரவுண்டர் இடத்தில் ஆடுவார். ஏனெனில் பவுலிங்கில் வேகத்தில் அவரது வேரியேஷன் எதிரணிகளை திணறடிக்கும். முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், ரன்னை வெகுவாக கட்டுப்படுத்துவார்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!