IND vs SA: முதல் டி20-யில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்திருக்கணும்..! கம்பீர் விமர்சனம்

By karthikeyan VFirst Published Jun 11, 2022, 8:34 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தீபக் ஹூடாவை சேர்த்திருக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.

212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக விளையாடி பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்து தன்னை ஒரு சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்தியதன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு, முதல் டி20 போட்டியின் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது.

ஆனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடாவைத்தான் சேர்த்திருக்க வேண்டும் என்று கௌதம்கம்பீர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் தீபக் ஹூடா சிறப்பாக பேட்டிங் ஆடினார். இந்நிலையில், தீபக் ஹூடா விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளரான கம்பீர், ஹூடாவைத்தான் தினேஷ் கார்த்திற்கு பதிலாக சேர்த்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், தினேஷ் கார்த்திக்கை முதல் டி20 போட்டியில் ஆடவைத்தார்கள். என்னை பொறுத்தமட்டில், தீபக் ஹூடா இருக்கும் ஃபார்மிற்கு அவரைத்தான் ஆடவைத்திருக்க வேண்டும். ஹூடா இளம் வீரர். ஆனால் அடுத்த போட்டிகளில் தேவையில்லாமல் மாற்றங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று கம்பீர் கூறினார்.

அதாவது ஹூடாவை முதல் போட்டியிலேயே ஆடவைத்திருக்க வேண்டும். இனிமேல் அடுத்துவரும் போட்டிகளில் மாற்றங்கள் செய்வது சரியாக இருக்காது என்று கம்பீர் கூறியிருக்கிறார்.
 

click me!