SL vs AUS: 3வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம்

Published : Jun 11, 2022, 06:47 PM IST
SL vs AUS: 3வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவரும் நிலையில், முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஆடாததால் அவருக்கு பதிலாக ஜோஷ் இங்லிஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் நுவான் துசாராவிற்கு பதிலாக பிரவீன் ஜெயவிக்ரமா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர் டி20 உலகக்கோப்பை ஷஃபாலி வர்மா அதிரடி! வங்கதேசத்தை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!