சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த பாபர் அசாம்! ஒரு கேப்டனாக கோலியின் சாதனையையும் முறியடித்தார்

Published : Jun 11, 2022, 06:02 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த பாபர் அசாம்! ஒரு கேப்டனாக கோலியின் சாதனையையும் முறியடித்தார்

சுருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் பாபர் அசாம்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்துவருகிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 77 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் சதத்தை தவறவிட்டாலும், பாபர் அசாம் அபாரமான சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக  பாபர் அசாம் அடித்த 9வது அரைசதம் இது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை குவித்துள்ள பாபர் அசாம், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 1000 ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். விராட் கோலி 17 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியதே, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய சாதனையாக இருந்தது. அதை இப்போது பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!