IPL 2021 #DCvsKKR 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஜெயிக்கணும்னா டெல்லி அணி அவரை சேர்த்தே தீரணும்! கம்பீர் அதிரடி

Published : Oct 13, 2021, 06:29 PM IST
IPL 2021 #DCvsKKR 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஜெயிக்கணும்னா டெல்லி அணி அவரை சேர்த்தே தீரணும்! கம்பீர் அதிரடி

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், ஸ்டீவ் ஸ்மித்தை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.   

ஐபிஎல் 14வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டி டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது. கேகேஆர் அணியின் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய 2 மாயாஜால ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தான் எதிரணிகள் கேகேஆரிடம் தோல்விகளை தழுவுகின்றன.

முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு இது மிக முக்கியமான போட்டி. ஆனால், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழல் மற்றும் ஃபெர்குசனின் வேகம் ஆகியவற்றை சமாளித்து வெற்றி பெற வேண்டுமென்றால், டெல்லி அணி ஸ்டீவ் ஸ்மித்தை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க - பாகிஸ்தானின் கௌரவத்தை கெடுக்குற மாதிரி பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும்..! ரமீஸ் ராஜாவுக்கு கடும் கண்டனம்

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ஸ்டீவ் ஸ்மித்தின் ஐபிஎல் ரெக்கார்டுகளை பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. ஷார்ஜா மாதிரியான ஆடுகளத்தில் கண்டிப்பாக ஸ்மித் உதவிகரமாக இருப்பார். தவான் ஒரு மாதிரி ஆடுவார். பிரித்வி ஷா வைத்தால் குடுமி; எடுத்தால் மொட்டை. ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மாதிரி ஆடுவார். ரிஷப் பண்ட் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுவார்.

கேகேஆரின் வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்மித் சிறப்பாக ஆடுவார். எனவே ஸ்மித்தை 3ம் வரிசையில் இறக்கிவிட்டு, அவரை சுற்றி மற்றவர்கள் ஆடலாம். ஷார்ஜா பிட்ச்சில் 140-150 ரன்கள் அடித்தால் போதும். எனவே ஸ்மித் ஆடுவது டெல்லி அணிக்கு நல்ல விஷயமாக அமையும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?